சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

”சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது” என ‘வேவ்ஸ்’ மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

மும்பையில் ‘வேவ்ஸ்’ உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றி பெற்றுள்ளது. சினிமாவும், இசையும் உலகை இணைக்கிறது. திரைப்பட தயாரிப்பு, கேமிங், இசை உள்ளிட்டவற்றில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.

இந்தியா அனிமேஷன் மற்றும் கிராபிக் துறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளாவிய சந்தையில் அனிமேஷன் துறையின் மதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மும்பையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இந்தியாவின் உணவு உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் இசையும் உலகம் முழுவதும் பிரபலமடையும் என்பது எனக்கு தெரியும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மும்பையில் நடந்த மாநாட்டில், இந்திய சினிமாவின் 5 பிரபலங்களின் நினைவு அஞ்சல் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார். குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகிய 5 பேரின் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...