பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 25 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள்

பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்திற்கு நடைபாதை வியாபாரிகளிடம் வரவேற்பு காணபடுகிறது. பிரதமரின்  நடைபாதை வியாபாரிகள் தற்சார்புநிதியான பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 25 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துசேர்ந்துள்ளன.

இவற்றில் 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இதுவரை பெறப்பட்டுள்ள 6.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களில் 3.27 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.87 லட்சம் கடன்கள் இது வரை வழங்கப்பட்டு உள்ளன.

கோவிட்-19 காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள வியாபாரிகள் ஊர் திரும்பிய பிறகு, இந்தத் திட்டத்தின் மூலம் கடன்களைப் பெற்றுப் பயனடையலாம். கடன் பெறுவதற்கு வியாபாரிகள் சுலபமாக தாங்களாகவே இணையதளம் வாயிலாகவோ அல்லது வங்கிகள் அல்லது நகராட்சி அலுவலகங்களுக்குச் சென்றோவிண்ணப்பிக்கலாம். கடன்தொகையை வங்கிகள் நேரடியாக மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்குகின்றன. வங்கி ஊழியர்களின் பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, “ஒருகாலத்தில் நடைபாதை வியாபாரிகள் வங்கியினுள் நுழையாமல் இருந்தனர். இன்று வங்கியே அவர்களது வீடுகளுக்குச் செல்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கடன்பெற்றுள்ள ஏராளமான வியாபாரிகள் குறித்த காலத்திற்குள்ளாக தங்களது கடனை திருப்பிசெலுத்தி உள்ளனர். இந்தத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணைஅமைச்சர் (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையிலான இந்தத்திட்டம், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் பாதையில் ஒரு சிறந்த முயற்சி என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.