பிரபல சமூக ஊடகமான, ‘யு- டியூப்’பில் இரண்டுகோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திரமோடி பெற்றுள்ளார்.
சமகால அரசியலில் டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன் படுத்தும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.சமூக ஊடகங்களான, ‘யு டியூப், எக்ஸ், வாட்ஸாப்’ போன்றவற்றில் தொடர்ந்து இயங்கிவரும் அவர், பல ‘வீடியோ’க்களையும் பதிவிட்டுவருகிறார்.அரசின் கொள்கைகள், செயல் பாடுகள் போன்றவை அவரது தனிப் பட்ட பக்கத்திலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பக்கத்திலும் பகிரப்பட்டு வருகிறன்றன.
இந்நிலையில், யு டியூபில் அதிக சந்தாதாரர்களை பெற்ற தலைவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.அதன்படி, பிரதமர் நரேந்திரமோடியின் யு டியூப் சேனல் இரண்டு கோடி சந்தாதாரர்களை பெற்றுள்ளது.கடந்தஆண்டு பிப்ரவரியில் ஒரு கோடி பேரை சந்தாதாரர்களாக பெற்ற நிலையில் தற்போது அது 2 கோடியாக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடிக்கு அடுத்த படியாக, 64 லட்சம் சப்ஸ்க்ரைபர்களுடன் தென் அமெரிக்க நாடான பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனோரா இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில், 11 லட்சம் பேருடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளார்.
இதையடுத்து நான்காவது இடத்தில் 7.94 லட்சம்பேருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார். மற்ற குறிப்பிடத் தக்க இந்திய தலைவர்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் சேனலுக்கு, 35 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |