மத்திய பட்ஜெட் இந்தியாவின் அமிதா காலத்திற்கான பட்ஜெட் -சிவராஜ் சௌகான்

மத்திய பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சி, ஏழைகள் நலன் மற்றும் அமிர்த காலத்திற்கான பட்ஜெட் என, மத்திய வேளாண், விவசாயிகள்  நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்கள் இந்தியாவின் ஆன்மாவாகவும், விவசாயிகள் அதன் உயிராகவும், திகழ்வதை அடிப்படையாகக் கொண்ட இந்த பட்ஜெட்டில், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம்  வேளாண் விளை பொருள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், இடுபொருள் செலவைக் குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டப்படும் எனவும் திரு சௌஹான் கூறியுள்ளார்.

3 கோடி பெண்களை  கோடீஸ்வரர்களாக்கும் நோக்குடன், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு உலகளாவிய, சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய பட்ஜெட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படை தினத்தை முன்னிட்டு வீர ...

கடற்படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு ...

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மண் ...

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மண்சந்தா மறைவிற்கு மோடி இரங்கல் முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும்  திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால்,  அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...