உமிழ்வில்லா மின்சாரவாகனம்

நாட்டில் மின்சார வாகனத்தை பிரபல படுத்தும் முயற்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம், ‘’உமிழ்வில்லா மின்சாரவாகனம்’’ குறித்த ‘’கருத்தியல் நிரூபண’’ சாத்தியக் கூறு ஆய்வை பெங்களூருவில் தனக்குசொந்தமான ஒரு எரிபொருள் நிலையத்தில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

‘’ஜீரோ உமிழ்வு மின்சாரவாகனம்’’ என்ற கருத்தியல், மின்சார வாகனத்திற்கு சூரிய சக்தியை பயன் படுத்துவதன் மூலம் ஜீரோ உமிழ்வை உறுதிசெய்வதாகும். மின்சார வாகன மின்னூட்ட முறையை, டெக்மகேந்திரா நிறுவனத்தின் ஆதரவுடனான ஹைக்கே எனர்ஜி என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. சூரிய சக்தியைப்பயன்படுத்தி, மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்யப்படும். மின்கட்டமைப்பில் மேம்பாடு தேவையில்லை. குறிப்பாக தொலைதூர பகுதிகளில், சிஸ்டம் உருவாக்கத்தால், தொகுப்பு விரிதிறன் மேம்படுத்தப்படும்.

இந்த சோதனை குறித்து உரையாற்றிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர்  விக்யான் குமார், ‘’இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாற்று எரிசக்தி அமைப்பின் ஒருபகுதியாக, நாங்கள் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கான 54 மின்கல மின்னூட்ட நிலையங்களை/ஸ்வாப் நிலையங்களை, பல்வேறு நிறுவனங்களின் கூட்டுமுயற்சியில் அமைத்துள்ளோம். இஸ்ரேலின் பின்னர்ஜியில், இந்தியாவில் மின் சார வாகனங்களுக்கான அலுமினியம் –ஏர் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தை அமைக்க சிறியளவு பங்குகளை நாங்கள் வைத்துள்ளோம்.

மின்சார வாகன பின்பற்றுதலில் நிச்சயமற்ற நிலை நிலவுவதால், தொகுப்புகொள்ளளவு மற்றும் சவால்களை எதிர்கொள்ள, எங்களது எரிபொருள் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டபசுமை எரிசக்தியை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தீர்வை கண்டுபிடிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹைக்கே எனர்ஜி உருவாக்கிய புதுமையான தீர்வு, இந்தப் பிரச்சினைகளை சமாளிக்கும் சாத்தியக் கூறை வெளிப்படுத்தியுள்ளது. பெங்களூரு முழுவதும் எரிசக்தி நிலையங்களில் முன்மாதிரி ஆய்வுகளை நாங்கள் நடத்தவுள்ளோம். எங்களது எரிபொருள் நிலையங்களை சூரிய எரிசக்தி மயமாக்குவதில் செய்யப்பட்ட முதலீட்டை இந்ததனித்துவமான தீர்வு ஊக்குவிக்கும். இது எங்களது மின்சார வாகன மின்னூட்ட முன்முயற்சியில் சிறந்த அடித்தளத்தை வழங்கும்’’, என்று கூறினார்.

இந்த தொழில்நுட்பம் ‘’வீரிய மைக்ரோகிரிட்ஸ்’’ –ஐ பயன்படுத்தி செயல்திறன்மிக்க மின்சார வாகன மின்னூட்டத்திற்கு வழிவகுக்கும். சூரிய சக்தி ஒளிமின்னழுத்த மின்கலங்களுடன், தற்போது உள்ள தொகுப்பு உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் வீரிய மைக்ரோகிரிட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுகொண்ட இந்த ஜீரோ உமிழ்வு மின்சார வாகன முறை அதிகம் பின்பற்றக்கூடிய முறையாகும். 100 சதவீதம் தூய்மையான எரி சக்தியை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு இது உருவாக்கபட்டுள்ளது. மின்சாரவாகன விநியோக உபகரணத்திற்கு கூடுதல்சுமையை இது தடுக்கிறது. இதன் பயனாக, தொகுப்பு கட்டமைப்புக்கு கூடுதல் முதலீடு இன்றி இந்த முறையை பயன்படுத்த முடியும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...