பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக் காய்ச்சல்ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு . எச்1 என் 1 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. உருவஅமைப்பை அடிக்கடி மாற்றி கொள்கிறது. எனவே இது ஏ.பி.சி. என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

ஏ டைப் வைரஸ்தொற்றினால் லேசான உடல் காய்ச்சல் இருக்கும். இருமல் , சளி, தலைவலி, வாந்தி , வயிற் றோட்டம் போன்றவை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி_இருக்காது. ஏ டைப் நோய் வந்தவர்களை தனிமைபடுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குரிய சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை தறக்கூடாது. அது பின்விளைவை ஏற்படுத்திவிடும். இவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள் தேவைஇல்லை. வீட்டில் ஓய்வேடுத்து கொண்டால் போதும்

பி டைப் நோயாளிகளுக்கு ஏ_டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறி குறிகளுடன் காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். தொண்டைவலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வகபரிசோதனை தேவை இல்லை. ஆனால் பி டைப் நோயாளிகளுக்கு_உடனடியாக டாமி புளு மாத்திரை தரப்படவேண்டும் .

சி டைப் நோயாளி களுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த_அறிகுறி தவிர வழக்கத்தைவிட அதிக மூச்சு திணறல் ஏற்படும். ரத்ததுடன் கலந்த சளி வரும். நகம் நீல நிறமாகும். பசி எடுக்காது. இவர்களை உடனே ஆய்வக பரி சோதனை செய்து மரு‌த்துவ மனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிட வேண்டும்.

‌பொதுவாக பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கை குட்டையில் 12 மணி நேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த நீரில் 30 நாட்களும் உயிர் வாழகூடியது .இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .இவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆலகநேரிடும், பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

Tags; ப‌ன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு, ப‌ன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி , ப‌ன்றிக்காய்ச்சல் நோய் அறி குறி , ப‌ன்றி காய்ச்சல் நோய்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...