இட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது

இந்திய அரசியலமைப்பில் உள்ளபடி, இடஒதுக்கீடு கொள்கையை, தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்பில் கூறியுள்ளபடி இடஒதுக்கீடு கொள்கையை, தேசியகல்வி கொள்கை 2020, ஆதரிக்குமா என்ற சந்தேகத்தை கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியான ஊடகதகவல்கள் எழுப்பின.

இதுகுறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். இடஒதுக்கீடு கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. இந்திய அரசியலபை்பில் கூறியுள்ள இடஒதுக்கீட்டை தேசியகல்வி கொள்கை உறுதி செய்கிறது. இதை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.

தேசிய கல்விகொள்கை 2020 அறிவிக்கப்பட்ட பின்புதான், ஜேஇஇ, நீட், யுஜிசி-நெட், இக்னோ நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டன. கல்வி நிறுவனங்களில் பலநியமனங்கள் நடந்தன. ஆனால், இதுவரை இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை.

தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டு நான்கு, ஐந்து மாதங்களுக்கு பின்பு, எந்தஆதாரமும் இல்லாமல் இந்த சந்தேகம் எழுப்புவதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூக பொருளாதாரத்தின் பின்தங்கியுள்ள இதர பிரிவினரையும் உள்ளடக்கும் புதியமுயற்சிகளுடன் தொடரும் என நான் வலியறுத்தி கூறுகிறேன்.

இது தொடர்பாக எந்தபுகார், வந்தால், அதற்கு எனது அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசித்துதான் தேசிய கல்விகொள்கை உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...