4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ராணுவவீரர்கள் மீட்டு, முழங்கால் அளவு உறைபனியில் சுமார் 4 மணி நேரம் சுமந்துசென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சிலநாட்களாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன் காரணமாக வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் சுமார் 3 அடி உயரத்துக்கு பனிபடர்ந்துள்ளது. அங்கு சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 6-ம் தேதி குப்வாரா மாவட்டம், ஹேண்ட்வாரா பகுதி, பெடாவதார் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி ஷமிமாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதாரநிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பனிமூடிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கர்ப்பிணியின் உறவினர்கள் திகைத்து நின்றனர்.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் சினார் படைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு 100 ராணுவ வீரர்கள் விரைந்துசென்று, பிரசவ வலியால் துடித்த ஷமிமாவை கட்டிலில் படுக்கவைத்து முழங்கால் அளவு பனியில் சுமந்து சென்றனர்.சுமார் 4 மணிநேரம் உறைபனியில் கால் புதைந்து நடந்த ராணுவ வீரர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியை சேர்த்தனர். அன்று மாலை ஷமிமாவுக்கு குழந்தைபிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து கர்ப்பிணியின் தந்தை குலாம்மிர் கூறும்போது, “பிரசவ வலியால் துடித்த எனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் தவித்தேன். செல்போன் மூலம் சினார் படைப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் விரைந்துவந்து எனது மகளை கட்டிலில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். குறித்த நேரத்துக்கு விரைந்து வந்து உதவி செய்ததால் எனது மகளையும் குழந்தையையும் காப்பாற்ற முடிந்தது. சினார் படைப்பிரிவு வீரர்களுக்கு மனதின் ஆழத்தில்இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது ராணுவ வீரர்கள் வீரம், தீரம், தொழில்நேர்த்திக்கு பெயர் பெற்றவர்கள். அதேநேரம் அவர்களது மனிதாபிமானமும் மெச்சத்தக்கது. எப்போதெல்லாம் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்கள் ஓடோடிவந்து உதவி செய்கிறார்கள். நமது ராணுவ வீரர்களின் வீரம், தீரம், மனிதாபிமானத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஷமிமா மற்றும் அவரது குழந்தையின் உடல்நலனுக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உறைபனியில் கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் சுமந்து சென்ற வீடியோவை சினார் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தவீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...