தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 1088 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலிமூலம் திறந்துவைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். இதில் மதுரை அருகே ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1088 அடுக்குமாடி வீடுகளும் அடக்கம். தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் ரூ.89.75 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ரூ.8.25 லட்சத்தில் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள 1088 வீடுகள் மதுரை மாநகரில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் பங்குத் தொகை ரூ.19.03 கோடி ஆகும்.
இதனை பிரதமர் தொடங்கிவைத்த போது, ராஜாக்கூரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். விரைவில் இந்தவீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |