யூனியன் பிரதேசங்களில் பிரதமர் மோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்

சில்வாசா: தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூ யூனியன் பிரதேசத்தில், 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

யூனியன் பிரதேசமான தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூவில் உள்ள சில்வாசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2,587 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார்.

இங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சில்வாசாவில், ‘நமோ’ மருத்துவமனையின் முதல் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார். 460 கோடி ரூபாய் செலவில், 450 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை, தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூவில், சுகாதார சேவைகளை வலுப்படுத்தும்.

இது இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக பழங்குடி சமூகங்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்கும்.

தொடர்ந்து, கிராம சாலைகள், பிற சாலை உட்கட்டமைப்பு, பள்ளிகள், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், பஞ்சாயத்து மற்றும் நிர்வாக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், கழிவுநீர் உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்த பயணத்தை முடித்து, குஜராத்தின் சூரத்துக்கு சென்ற பிரதமர் மோடி, சூரத் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை நேற்று மாலை துவக்கி வைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...