ஒரு லட்சம் பழங்குடியின மக்களுக்கு வீடுகள்

பிரதமர்  பழங்குடியின வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒருலட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய்க்கான முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி. ”அரசின் நலத் திட்டங்கள் அனைவரையும் சென்ற டைந்தால் மட்டுமே நாடு முன்னேற்றபாதையில் செல்லும்” என கூறினார்.

பழங்குடியின மக்களின் சமூகபொருளாதார நிலையை உயர்த்துவதற்காக பிரதமர் பழங்குடியின நலத்திட்டம் துவங்கப்பட்டது.  பாதுகாப்பான வீடுகள் சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரம் சிறப்பான கல்வி ஆரோக்கியம் மற்றும் ஊட்ட சத்து மின்சாரம் சாலை மற்றும் தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நாட்டின் தொலைதுார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடுகட்டுவதற்கான நிதி அளிக்கப்படுகிறது.

முதல் தவணையாக ஒரு லட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி நேற்றுஅளித்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது: என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சி ஏழைகளுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. பட்டியலின பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டத்துக்கான நிதி ஐந்துமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பழங்குடியின மாண வர்களின் கல்விக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு தரமானகல்வி வழங்குவதற்காக துவக்கப்பட்ட ஏகலைவா மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கையை 90ல் இருந்து 500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழங்குடியின மக்களில் மிகவும் பின் தங்கிய மக்கள் அரசின் ஒவ்வொரு நலதிட்டத்திலும் முழுமையான பலனை அடைவதை உறுதி செய்ய இந்த அரசு தீவிரமாக உள்ளது. பழங்குடியின மக்களுக்கான நலதிட்டங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பேசியுள்ளேன்.

அதே சமூகத்தில் இருந்துவரும் அவர் நடைமுறையில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அதன் அடிப்படையிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. உங்களுக்காக நான்குகோடி வீடுகளை இந்த அரசு கட்டித்தர உள்ளது. முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட உங்களை அடையாளம் கண்டு உங்களுக்குதேவையான உதவிகளை செய்வதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.

சொந்தவீடு கட்டிக் கொள்வதற்கான முதல் தவணை பெற்ற ஒருலட்சம் பயனாளர்கள் வீடுகளில் இன்றைக்குதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன்  என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...