உங்களால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் வலியை என்றாவது உணர்ந்தீர்களா

மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக குடும்பத்தினரின் வலியை மம்தா என்றாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க் கட்சியான பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.

பன்குரா மாவட்டத்தில் உள்ள ராணி பந்த் நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால், நிச்சயமாக 7-வது ஊதியக் குழுவை அரசு ஊழியர்களின் நலனுக்காக அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறேன்.

தீதி (மம்தா) உங்கள் காலில்காயம் ஏற்பட்டபோது, நீங்கள் வலியை உணர்கிறீர்கள். உங்களின் காயம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஆனால், 130 பாஜக தொண்டர்களை உங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் கொலைசெய்தார்களே, அந்த 130 பாஜக தொண்டர்களின் தாய்மார்களின் உணர்வுகளை, வலியை, வேதனையை உணர்ந்திருக்கிறீர்களா. அந்த வலியை உணர ஏதாவதுமுயற்சி எடுத்திருக்கிறீர்களா?

பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் அடைந்தவேதனையை ஒருபோதும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். நிச்சயமாகத் தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களித்து சரியான பதிலடியை உங்களுக்கு வழங்குவார்கள்.

பாஜக ஆட்சிக்குவந்தால், மாநிலத்தில் உள்ள பழங்குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பழங்குடியினச் சான்றிதழ் வழங்குவதற்குக்கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கமிஷன் கேட்கிறார்கள். ஆனால், பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கிறோம். அவர்களின்கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகியவை மீது கவனம் செலுத்தப்படும். இதை நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளோம்”.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...