ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்வு

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் முன்னணி கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்எல்ஏக்களால் பாஜக சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமில் ஆட்சிக்குவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாம் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 52 வயதான ஹிமந்தா பிஸ்வாசர்மா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறும் சர்பானந்த் சோனோவால் மற்றும் கட்சியின் நான்குமத்திய பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்மாவின்பெயரை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அறிவித்த நிலையில், சர்பானந்த் சோனோவால், பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சர்மாவின் பெயரை முன்மொழிந்தார். மற்றவர்கள் அதைஆதரித்தனர்.

நரேந்திர சிங் தோமரைத் தவிர, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் மற்றும் கட்சியின் தேசியதுணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா ஆகியோரும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மத்திய பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

2001 முதல் ஐந்தாவது முறையாக ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மா, சோனோவால் அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராக இருந்தார். டெல்லியில் உள்ள பாஜகதலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நீற்று நடந்த மூன்று சுற்று கூட்டங்களுக்குப் பிறகு இன்று குவஹாத்தியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சர்பானந்த் சோனோவால், சர்மா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் உடனிருந்தனர்.

அசாமின் பூர்வீக சோனோவால்-கச்சாரி பழங்குடியினரைச் சேர்ந்த சோனோவால் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு வடகிழக்குஜனநாயகக் கூட்டணியின் அழைப்பாளராக இருக்கும் சர்மா ஆகியோர் சமீபத்தில் நடந்த மூன்றுகட்ட மார்ச்-ஏப்ரல் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வழிநடத்தினர்.

126 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில், பாஜக 60 இடங்களையும், அதன்கூட்டணி கட்சிகளான அசோம் கணபரிஷத் (ஏஜிபி) ஒன்பது இடங்களையும், யுனைடெட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் (யுபிபிஎல்) ஆறுஇடங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...