டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என போராடிவிட்டு இப்போது திறக்கமுயல்வது நியாயமா ?

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி அளிக்கபட்டுள்ளது. மூன்று வாரங்களாக டாஸ்மாக் பூட்டப்பட்ட நிலையில், திங்கட் கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது.

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறந்தபோது திமுக நடத்திய போராட்டத்தின் புகைப்படங்களை பதிவிட்டு. ”எதிர்க் கட்சியாக, டாஸ்மாக்கிற்கு எதிராக அறிவாலயம் கொடுத்த வாக்குறுதிகளும், நடத்திய நாடகங்களும், இன்று அடிக்கும் அந்தர் பல்டிகளும் தெளிவாகியுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக மாநிலதலைவர் எல்.முருகனும் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நோய் தொற்றின்போது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என திமுக போராடிவிட்டு இப்போது டாஸ்மாக் கடைகளை திறக்கமுயல்வது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பி உள்ளார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள எல்.முருகன், மதுக்கடைகள் திறப்பதை பெண்கள் எதிர்ப்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...