ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் தணலில் காட்டி பால் வற்றிய பெண்களின் தனங்களில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு நன்கு உண்டாகும்.
இவ்விலைகளைச் சிறிதாக அறிந்து, சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டுடன், வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கு, வாத இரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடமிடலாம். இதனால் வேதனை தணியும்.
சிற்றாமணக்கு இலையும், கீழாநெல்லி இலையையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காயளவு, மூன்று நாளைக்கு காலையில் மட்டும் கொடுத்து நாளாம் நாள் 3,4 முறை வயிறு போகுமாறு சிவதை சூரணம் கொடுக்க காமாலை நீங்கும்.
மலக்கட்டும் வயிற்று வலியுமுள்ள காலத்திலேனும் சூதக்கட்டு அல்லது சூதகத் தடையுடன், அடிவயிற்றில் வலி காணும் போதேனும் அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு இலைகளை வதக்கிப் போட்டுவர அவைகள் யாவும் குணப்படும்.
சிறு முத்துக்களிளிருந்து எடுக்கப்படும் நெய்க்குச் சிற்றாமணக்கு நெய் (அ) சிற்றாமணக்கு எண்ணெய்.
பெரு முத்துக்களிளிருந்து எடுக்கும் எண்ணெய் பெருமுத்துக்கொட்டை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் என்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த இலையை நன்கு குறுக அறிந்து சிற்றாமணக்கு நெய்விட்டு நன்றாக வதக்கி ஒரு துணியில் வைத்து முடிந்து ஆசனத்தில் மெல்ல ஒத்தடம் கொடுத்து வருவதன் மூலமும், வதக்கிய இலையை ஆசனவாயிலில் வைத்துக் கட்டுவதன் மூலமும், மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மூலக் கடுப்பும் நீங்கும்.
இதன் தளிர் இலைகளை எடுத்துச் சிற்றாமணக்கு நெய் தடவி அனலில்வாட்டி வயிற்றில் வைத்துக் கட்டி வந்தால் எந்தவிதமான கடுமையான வயிற்றுவலியாக இருந்தாலும் குணமாகிவிடும்.
ஆமணக்கு நெய் நன்கு மலத்தை இளக்கும் நல்ல மருந்துப் பொருளாகும், பெரியவர்களுக்குப் பசுவின் பாலுடனாவது இஞ்சிச் சாற்றுடனாவது ஏறக்குறைய இரண்டு தேக்கரண்டியளவு கலந்து கொடுக்க வேண்டும். சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எண்ணெய்யின் அளவைப் பாதிக்குப்பாதியாகக் குறைப்பது நல்லது. இவ்விதம் கொடுத்தால் மலம் நன்கு இளகும், இதைத் தொடர்ந்து கொடுத்து வரக்கூடாது. எப்போதாவது ஒருமுறைதான் கொடுக்க வேண்டும். மூலரோகத்தால் துன்பப்படுபவர்களுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் கொடுத்து வர மலக்கட்டைப் போக்கலாம். ஆக, ஆமணக்கும் ஒரு நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.