நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த 100 லட்சம் கோடி ரூபாயில் கதிசக்தி திட்டம்

நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும் கதி சக்தி திட்டம்விரைவில் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திரமோடி 75 ஆவது சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வீர வணக்கம் செலுத்தினார். அப்போது விமான படைக்குச் சொந்தமான இருஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின. முன்னதாக ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் 8 ஆவது முறையாக சுதந்திர தின விழாவில் உரையாற்றுகிறார். அவர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் சுதந்திரத்தை பெற்று தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் இந்தநேரத்தில் நினைவு கூர்கிறேன். நாட்டை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுக் கூர்கிறேன்.

கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி தயாரித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிரானபோரில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் இந்த விழாவல் பங்கேற்றுள்ளார்கள்.

75 ஆவது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசியகொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி75 ஆவது சுதந்திர தினவிழா: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திரமோடி

ஒலிம்பிக் தடகளத்தில் புதியவரலாறு படைத்தது மிகப் பெரிய விஷயமாகும். நாடு பிரிவினை அடைந்தபோது பொதுமக்கள் கடும் துயரை அனுபவித்தனர். இந்த வேதனையை இன்னும் நான் உணர்கிறேன். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகிலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 50 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கிடைத்துவிட்டது. கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலேயே உருவாக்கியதால் தான் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கிறது. நகரம், கிராமம் என்றில்லாம் நாடு முழுவதும் ஒரேமாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறையதிட்டங்களை வகுத்திருக்கிறோம். மின் இணைப்பு , ஓய்வூதியம், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம். கடந்த இருஆண்டுகளில் 4 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் சாலை, 100 சதவீதம் வங்கிக் கணக்கு என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அரசின் திட்டங்கள் ஒருசிலரை கூட சென்றடையாமல் போகும் அவலநிலை இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை அளிப்பது அரசின் முக்கிய பணியாகும். மக்கள்மருந்தகம் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துங்கள் வழங்கப்படுகின்றன. ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நல்லசத்தான அரிசி வழங்கப்படுகிறது.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு திட்டமும் செயல்படுத்தப் பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு திட்டத்தை சமீபத்தில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். வடகிழக்கு மாநிலங்கள், ஜம்முகாஷ்மீர் , லடாக் உள்ளிட்ட பகுதிகளில் மலை சாதியினர் வாழும் பகுதிகளை தகவல்தொடர்பால் இணைக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் சுற்றுலா, சாகச சுற்றுலா, பனைமரத் தோப்புகள் ஆகியவற்றை வளர்க்க தனி கவனம் செலுத்தப்படும்.

ஆழ்கடல் பரிசோதனை மூலம் புதியவளங்களை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் 110 பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தனிகவனம் செலுத்தப்படுகிறது. கிராமங்களில்கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஒருசந்தையை உருவாக்கம் டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவி செய்யும். நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் விஞ்ஞானிகள் முனைப்போடு பணியாற்றி வருகிறார்கள். காய்கறிகள், தானியங்கள் உற்பத்தியில் விஞ்ஞானிகளின் உதவி கிடைத்துவருகிறது. சிறு விவசாயிகளை மனதில் கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.

கடன் அட்டைகள் வழங்குதல் சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பெருமையின் சின்னமாக சிறுவிவசாயிகள் மாற வேண்டும் என விரும்புகிறோம். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் நமது பழம் பெருமைகளை பாதுகாக்க வேண்டும். உலகத்தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய நாம் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

உலக நாடுகளோடு நாம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் தரமான பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நாட்டின் ரயில்வே துறையும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அம்ருத் மகோத்ஸவம் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினம்வரை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக தடைக்கற்களைத் தாண்டி செல்லும் வகையில் மிகப்பெரிய திட்டம் வரப்போகிறது. நம்முடைய தொழில்துறை உலக நாடுகளுடன் போட்டியிட இந்ததிட்டம் உதவி செய்யும். கதி சக்தி என்ற இந்த வேகமான திட்டம் நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்யும். நம்நாட்டில் இருந்து செல்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே நாட்டின்பெருமை உள்ளது.

நாட்டின் புதிய தொழில்முனைவோரை உலகின் மிகப்பெரிய தொழில் துறையினராக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். 100 லட்சம் கோடி ரூபாயில் இந்த கதிசக்தி திட்டம் செயல்படுத்தப்படும். கொரோனா நீண்ட காலம் நம்மோடு இருக்கபோகிறது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஏராளமானவர்களை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் பரிசோதனையில் உள்ளது. போர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடினமான காலக்கட்டத்திலும் இந் ...

கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...