75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக சமூக வலைதள பக்கங்களில் முகப்பு பக்கம் படங்களை மாற்றிய பிரதமர்வலைதள பக்கங்களின் முகப்புப் படங்களை மாற்றியுள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழாவை சிறப்பாகக்கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக, சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் நாட்டுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13- 15 வரை ஆகிய 3 நாள்கள் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சமூக வலைதள பக்கங்களில் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி தனது முகநூல், ட்விட்டர் பக்கங்களின் முகப்புப் புகைப்படத்தை மாற்றி தேசியக் கொடியை வைத்துள்ளார். 75 ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி அனைவரும் தங்கள் சமூகவலைதள பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக்கொடியை வைக்கவேண்டும் என்று வலியறுத்தியுள்ளார்.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மாற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது தேசபக்தி ஊட்ட வேண்டிய நேரம் இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |