இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு இப்போதும் புத்தா் ஊக்கசக்தியாக இருக்கிறாா் என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

உத்தரபிரதேச மாநிலம், குஷிநகரில் சா்வதேச விமான நிலையத்தை புதன் கிழமை திறந்து வைத்த பிறகு, அங்குள்ள மகாபரிநிா்வாண கோயிலில் அபிதம்மா தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அதில், அவா் பேசியதாவது:

புத்தா் ஒருபிரபஞ்சம். அதிகபட்ச பொறுப்புணா்வே புத்தரின் தத்துவம். புத்தரின் போதனைகளை நாம் பின்பற்றினால், ‘யாா் செய்ய போகிறாா்கள்?’ என்பதற்குப் பதிலாக ‘என்ன செய்ய வேண்டும்’ என்ற பாதையை அதுகாட்டும். மனிதா்களின் ஆன்மாவில் வாழும் புத்தா், பல்வேறு நாடுகள் மற்றும் கலாசாரத்தை இணைப்பவராக இருக்கிறாா்.

புத்தரின் இந்தப் போதனையை இந்தியா தனது வளா்ச்சிப் பயணத்தின் ஓா் அங்கமாகக் கொண்டுள்ளது. அறிவாற்றல், மாமனிதா்களின் சிறந்த போதனைகள் அல்லது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு ஒரு போதும் நம்பிக்கை இல்லை. எதுவாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பகிா்ந்து கொள்ள வேண்டும். எனவேதான் அகிம்சை மற்றும் கருணைபோன்ற மனித நற்பண்புகள் இயற்கையாகவே இந்தியா்களின் இதயத்தில் பதிந்துள்ளது.

புத்தா் இன்றைக்கும் இந்திய அரசியல் சாசனத்துக்கு உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறாா். புத்ததா்ம சக்கரம் இந்தியாவின் மூவா்ண கொடியில் இடம்பெற்று, நமக்குத் தூண்டுகோலாகத் திகழ்கிறது. இன்றைக்கும் யாராவது இந்திய நாடாளுமன்றத்துக்கு வந்தால், ‘தா்மசக்கரா பிரவாா்தனைய’ என்ற வாசகத்தை நிச்சயம் காணலாம். புத்தபிரான் எல்லைகளையும், திசைகளையும் கடந்தவா்.

குஜராத் மண்ணில் பிறந்த மகாத்மா காந்தி, புத்தரின் போதனைகளான உண்மை, அகிம்சை ஆகியவற்றைக் கடைபிடித்தவா்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத் தொடா்புகள் உள்ளன. அசோக சக்கரவா்த்தியின் புதல்வா் மகேந்திரனும், புதல்வி சங்கமித்திரையும் புத்தரின் போதனைகளை இலங்கைக்குச்சென்று பரப்பினா். நீங்களே உங்களுக்கு விளக்காக இருங்கள் என்று போதித்தவா் புத்தா்.

ஒருவா் தன்னைத்தானே பிரகாசமாக்கிக் கொள்ளும் போது, அவா் ஒட்டுமொத்த உலகுக்கும் விளக்காகத் திகழ்வாா். இந்தப் போதனைதான் இந்தியாதற்சாா்பு அடைவதற்கு உந்துசக்தியாகத் திகழ்கிறது. இந்த ஊக்கம்தான் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கேற்கும் வலிமையை நமக்குஅளிக்கிறது. அனைவரின் முயற்சி மற்றும் அனைவரின் ஆதரவுடன், அனைவரும் முன்னேறுவோம் என்ற தாரக மந்திரத்தின் மூலம் புத்தபிரானின் போதனைகளை இந்தியா முன்னெடுத்து செல்கிறது என்றாா் பிரதமா் மோடி.

விழாவில் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சா்கள் ஜி.கிஷண்ரெட்டி, கிரண் ரிஜிஜு, ஜோதி ராதித்ய சிந்தியா, இலங்கை அமைச்சா் நமல்ராஜபட்ச, இலங்கையைச் சோ்ந்த பௌத்த மத குழுவினா், மியான்மா், வியத்நாம், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பூடான், தென்கொரியா, இலங்கை, மங்கோலியா, ஜப்பான், சிங்கப்பூா், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தூதா்கள் ஆகியோா் விழாவில் கலந்து கொண்டனா்.

குஷிநகரில் ரூ.260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சா்வதேசவிமான நிலையத்தை பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா். அங்கு முதலாவதாக வந்திறங்கிய இலங்கை விமானத்தையும், அதில் வந்த பௌத்த துறவிகளையும் பிரதமா் வரவேற்றாா்.

அங்கு திரண்டிருந்தவா்கள் மத்தியில் பிரதமா் பேசியதாவது: உலகெங்கிலும் உள்ள பெளத்த சமுதாயத்தினரின் நம்பிக்கை கேந்திரமாக இந்தியா திகழ்கிறது. புத்தபிரான் ஞானம்பெற்றது முதல் மகாபரிநிா்வாணம் அடைந்தது வரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கை பயணத்துக்கும் இந்த சுற்றுவட்டாரப் பகுதி சான்றாக திகழ்கிறது.

ஆன்மிகம் அல்லது பொழுதுபோக்கு என சுற்றுலாவை மேம்படுத்த ரயில், சாலை, விமானம், நீா்வழிப் போக்குவரத்து, ஹோட்டல், மருத்துவமனை, இணையதள இணைப்பு, சுகாதாரம், கழிவு சுத்திகரிப்பு மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலை உறுதி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நவீன கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேற்கொள்வது அவசியம்.

ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனைசெய்ய முடிவெடுத்தது, நாட்டில் விமானப் போக்குவரத்து துறையைத் தொழில்ரீதியாக நடத்தவும், பயணிகளுக்கான வசதி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் உதவும்.

கா்மாவை கருணையுடன் சோ்க்கவேண்டும் என்று சோஷலிச தலைவா் ராம் மனோகா் லோகியா அடிக்கடி கூறுவாா். ஆனால், உத்தரபிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்கள் (சமாஜவாதி கட்சி) ஏழைகளின் வலியைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அவா்களின் கா்மா எல்லாம் ஊழல், குற்றத்துடன் தொடா்புடையது. அவா்கள் சமதா்மவாதிகள் அல்லா் (சமாஜவாதி) தங்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுபவா்கள் என்பதை மக்கள் நன்கு அறிவா் என்றாா் பிரதமா் மோடி.

ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்: குஷிநகரில் ராஜ்கியா மருத்துவக் கல்லூரிக்கு பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். பலவளா்ச்சித் திட்டங்களையும் அவா் தொடக்கிவைத்து, அடிக்கல் நாட்டினாா்.

One response to “இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஊக்கசக்தி புத்தா்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...