நாம் பட்டதாரிகளை உருவாக்கினால் மட்டும் போதாது

‘ஆங்கிலேயா்கள் தங்கள் தேவைகளைப் பூா்த்திசெய்யும் பணியாளா் வா்க்கத்தை உருவாக்கும் வகையில் இந்தியாவில் கல்விமுறையை அறிமுகப்படுத்தினா்; அதில் இன்னும் நிறைய மாற்றம் தேவைப்படுகிறது’ என்று பிரதமா் நரேந்திரமோடி கூறினாா்.

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடா்பான 3 நாள் மாநாடு, வாராணசியில் வியாழக்கிழமை தொடங்கியது. மத்தியகல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு, பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து இந்தமாநாட்டை நடத்துகின்றன. இந்த மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அளிப்பதற்காக மட்டுமே கல்வி முறை உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயா்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் தங்களுக்கான வேலைகளை செய்யும் பணியாளா்களை உருவாக்கும் வகையில் இந்தியாவில் ஒருகல்வி முறையை அறிமுகப்படுத்தினா். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நமது கல்வி முறையில் சிறிதளவு மாற்றம் செய்யபட்டது. ஆனால், இன்னும் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

நாம் பட்டதாரி இளைஞா்களை உருவாக்கினால் மட்டும் போதாது. நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்கும் வகையில் நமது கல்விமுறையை மாற்ற வேண்டும்.

நமது சிறாா்கள் சந்தேகங்களை நிவா்த்திசெய்ய கூகுளின் உதவியை நாடுகிறாா்கள். ஆனால், அடுத்த சிலஆண்டுகளில் நமது கல்லூரி வளாகங்களில் அவா்களுக்குத் தேவையான தகவல் களஞ்சியத்தை உருவாக்கவேண்டும். பிரச்னைகளையும் சவால்களையும் ஆராய்ந்து அவற்றுக்குரிய தீா்வுகளை நாம் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை தேசிய கல்விக்கொள்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலகின் கல்விமையமாக இந்தியா உருவாகும் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திரபிரதான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரூ.1,774 கோடி திட்டங்கள்: வாராணசியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். சில திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். அவற்றின் மொத்தமதிப்பீடு ரூ.1,774 கோடியாகும்.

இது தவிர, எல்.டி. கல்லூரியில் ‘அட்சய பாத்திரம்’ மதிய உணவுசமையல் கூடத்தையும் பிரதமா் திறந்துவைத்தாா். அந்த உணவகத்தில் ஒருலட்சம் மாணவா்களுக்கு மதிய உணவு தயாரிக்க முடியும் என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...