வரும் 25 ஆண்டுகளில் விவசாயத்தில் மேலும் பலபரிசோதனைகளை நடத்தி உலகத்துக்கே நாம் விவசாயத்தில் முன்னோடியாக திகழ வழிவகுத்திட வேண்டும். இக்ரிசாட் பரிசோதகர்களின் கடந்த 50 ஆண்டுகால பங்கு சிறப்பானது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். நாட்டில் 80 சதவீதம் சிறுநில விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பலஇன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மழை உரியகாலத்தில் பெய்யாவிடில் இவர்கள் பெரும்நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆதலால், குறைந்தநீரில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில் நாம் விவசாயத்தை பெருக்கவேண்டும். அறுவடை சமயத்தில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதனைபோக்க இக்ரிசாட் பரிசோதனை நிபுணர் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் 6 பருவ காலங்கள் 15 ரக காலநிலை மாற்றங்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. இதற்கு ஏற்ப நாம் விவசாயத்தை பெருக்கவேண்டும். மேலும் நம் நாட்டில் 170 வறட்சி மாவட்டங்கள் உள்ளன. விவசாயத்தில் நவீன தொழில்நுட்ப புரட்சியை விரைவில் ஏற்படுத்த உள்ளோம்.
டிஜிட்டல் விவசாயத்தை பெருக்க பலமாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த பட்ஜெட்டில்கூட சொட்டுநீர் பாசன விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
பாமாயில் உற்பத்தியில் நாம்இன்னமும் அதிககவனம் செலுத்த வேண்டும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்உள்ளன. இதுதொடர்பாக இவ்விரு மாநிலங்களுக்கும் அதிக ஊக்குவிப்பு இருக்கும். பயோபாமாயில் உற்பத்தியில் செலவு மிககுறைவு.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |