ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாப்போம், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவோம்

நீர் பராமரிப்பும், நீர்நிலைகளின் பாதுகாப்பும் மக்களின் சமூக, ஆன்மிக கடமை என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரை சேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தவேண்டும் என்பதை மனிதர்களின் சமூக மற்றும் ஆன்மிகக் கடமை என்றே கூறப்பட்டிருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் நீர்நிலைகளை இணைப்பதன் மீதும், நீர் பாதுகாப்பின் மீதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி அகிலஇந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சிவழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 88வது முறையாக இன்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். புதியவிஷயங்களுடன், புதிய கருத்தூக்கம் அளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுக்களுடன், புதிய புதிய செய்திகளைத் திரட்டி, மீண்டும் ஒருமுறை உங்களுடன் மனதின்குரல் நிகழ்ச்சியில இணைய நான் வந்திருக்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் வெப்பம் அதிக தீவிரத்தோடு அதிகரித்துவருகிறது.அதிகரிக்கும் வெப்பத்தில், நீரைசேமிப்பது என்ற பொறுப்பும் கூட அதே அளவுக்கு அதிகரித்து வருகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே போதுமான அளவுக்கு நீர் ஒருவேளை இருக்கலாம். ஆனால், நீர்த்தட்டுப் பாட்டுப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும், அவர்களுக்கு ஒவ்வொரு சொட்டு நீரும், அமிர்தத்துக்கு ஒப்பானதாகும்.

நண்பர்களே, இந்தசமயத்தில், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் போது, தேசம் எத்தகைய உறுதிப்பாடுகளைத் தாங்கிமுன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதிலே நீர்பராமரிப்பு என்பதும் ஒன்றாகும். அமிர்த மஹோத்சவமத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர் நிலைகளை நாம் உருவாக்குவோம். இது எத்தனை பெரிய இயக்கம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா.

உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் கேட்டு கொள்வதெல்லாம், அவர்கள் இந்த இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், இதனைத் தங்களின் பொறுப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான். நீங்கள் உங்கள் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய வரலாறு ஏதேனும் இருந்தால், ஏதேனும் ஒருபோராட்ட வீரரின் நினைவுச் சின்னம் இருந்தால், அதையும்கூட நீங்கள் அமிர்த நீர்நிலையோடு இணைக்கலாம்.

அமிர்த நீர்நிலை அமைப்பது பற்றிய உறுதிப்பாடு மேற்கொண்ட பிறகு பலஇடங்களில் இது தொடர்பாகப் பணிகள் படுவிரைவாக நடந்தேறி வருவதாக எனக்குசெய்திகள் வருகின்றன, இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்புரின் கிராமப் பஞ்சாயத்து பட்வாயி பற்றி எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கே கிராமசபை நிலத்தில் ஒரு குளம் இருந்தது. ஆனால் அது மாசடைந்து, கழிவுகள்-குப்பைகளால் நிரம்பிஇருந்தது. கடந்த சில வாரங்களில், தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அந்தப்பகுதி மக்களின் உதவியோடு, வட்டார பள்ளிக் குழந்தைகளின் துணையோடு, இந்த மாசடைந்த குளத்திற்கு மீளுயிர் அளிக்கப்பட்டது. இப்போது இந்தக்குளத்தின் கரைகளில் தடுப்புச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், உணவிடங்கள், நீரூற்றுக்கள், ஒளியமைப்புகள் என பலவகையான அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ராம்புரின் பட்வாயி கிராமப் பஞ்சாயத்திற்கும், கிராமத்து மக்களுக்கும், அங்கிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், இந்த முயற்சிக்காக, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, நீரின் இருப்பு, நீரின்தட்டுப்பாடு என இவை, எந்த ஒருதேசத்தின் முன்னேற்றத்தையும், வேகத்தையும் தீர்மானம் செய்பவை. மனதின் குரலில், தூய்மை போன்ற விஷயங்களோடு கூடவே நான் நீர்பராமரிப்பு பற்றி மீண்டும் மீண்டும் கூறிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமது புனித நூல்களில் தெளிவாக எழுதியிருக்கிறது.

உலகிலே, நீர் மட்டுமே, அனைத்து உயிர்களின், வாழ்வாதாரம் என்பதோடு, நீர்தான் மிகப்பெரிய ஆதாரம்; ஆகையால்தான் நமது முன்னோர்கள், நீர் பராமரிப்பிற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரைசேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதை மனிதர்களின் சமூக மற்றும் ஆன்மிகக்கடமை என்றே கூறப்பட்டிருக்கிறது. வால்மீகி ராமாயணத்தில் நீர்நிலைகளை இணைப்பதன் மீதும், நீர் பாதுகாப்பின்மீதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதைப் போலவே, மாணவர்களும் நன்கறிவார்கள், சிந்துசரஸ்வதி மற்றும் ஹரப்பா நாகரிகங்களிலும் கூட, பாரதத்தில் நீர் தொடர்பாக எந்த அளவுக்கு மேம்பட்டதொரு பொறியியல் இருந்தது என்பது தெரிய வருகிறது. பண்டையகாலத்தில் பல நகரங்களின் நீர் நிலைகளில், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அமைப்பு முறைகள் இருந்தன, அந்த காலத்தில் மக்கள் தொகை அந்த அளவுக்கு இருக்கவில்லை, இயற்கை வளங்களுக்கான தட்டுப்பாடும் அந்தளவுக்கு இருக்கவில்லை, ஒரு வகையில் வளம் நிறைந்திருந்தது எனலாம், இருந்தாலும், நீர்பராமரிப்பு தொடர்பாக அப்போது விழிப்புணர்வு அதிகமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. உங்கள் அனைவரிடத்திலும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய பகுதிகளில் இருக்கும் பழைய நீர்நிலைகள், ஏரிகள்-குளங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

அமிர்த சரோவர் இயக்கம் காரணமாக நீர்பராமரிப்போடு கூடவே இந்தப்பகுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியும். இதன் காரணமாக நகரங்களில், பகுதிகளில், வட்டார சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு அடையும், கண்டு களிக்க மக்களுக்கும் ஒரு இடம் கிடைக்கும்.

நண்பர்களே, நீரோடு தொடர்புடைய ஒவ்வொரு முயற்சியும் நமது எதிர்காலத்தோடு தொடர்புடையது. இதிலே முழுமையாக சமூகத்தின் கடமை இருக்கிறது. இதற்காக பல நூற்றாண்டுக்காலமாக பல்வேறு சமூகங்கள், பல்வேறு முயற்சிகளைத் தொடந்துசெய்து வருகின்றார்கள்.

எடுத்துக்காட்டாக, குஜராத் மாநிலம் கட்சில் இருக்கும் ஒரு பழங்குடியினமான மால்தாரீ, நீர் பராமரிப்பின் பொருட்டு, வ்ருதாஸ் என்ற பெயர்கொண்ட வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இதன்படி, சிறியகுளங்கள் ஏற்படுத்தப்பட்டு, இவற்றைப் பாதுகாக்க அருகிலேயே மரங்கள்-செடிகள் நடப்படும். இதைப் போன்றே மத்தியப் பிரதேசத்தின் பீல் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரியமான ஹல்மா வாயிலாக நீர் பராமரிப்பைச் செய்து வருகின்றார்கள். இந்தப் பாரம்பரியப்படி, இந்தப் பழங்குடியினத்தவர், நீரோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக ஓரிடத்தில் ஒன்று கூடுகிறார்கள். ஹல்மா பாரம்பரியத்திலே கிடைத்த ஆலோசனைகள் காரணமாக இந்தப் பகுதியில் நீர்த்தட்டுப்பாடு குறைந்திருப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்திருக்கிறது.

நண்பர்களே, இப்படிப்பட்ட கடமையுணர்வு உங்கள் மனதிலும் வந்துவிட்டால், நீர் பிரச்சினையோடு தொடர்புடைய எத்தனை பெரிய சவாலாக இருந்தாலும், அதற்குத் தீர்வைக் கண்டுவிட முடியும். சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவக் காலத்தில், நாம் நீர் பராமரிப்பு, நீர் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாடுகளை மேற்கொள்வோம் வாருங்கள். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாப்போம், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவோம்” என்று பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...