ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான்

முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப சிலகட்சிகள் முயற்சிப்பதாகவும் அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். ஏழைகள் மற்றும் நடுத்தரமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து, பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம்.

முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப சிலகட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது. ஜனசங்கத்தின் காலத்தில், நம்மைப்பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை. இருந்தாலும் நமது தொண்டர்கள் சிரமப்பட்டு புதிய இந்தியாவை கட்டியெழுப்பி உள்ளனர்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சிலமுயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். அதன்மூலம் அரசியல் ஆதாயம்தேட முயற்சி நடக்கிறது.

பாஜக ஒவ்வொருமாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக் கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நாம் நிர்ணயித்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றவேண்டும். இந்தியா கனவுகளால் நிரம்பிய நாடாகப் பார்க்கப்படுகிறது.

உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. ஏற்கெனவே இருந்த அரசுமீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். 2014- ல் புதிய அத்தியாயத்தை எழுத மக்கள் முடிவுசெய்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தினர்.

நாட்டு மக்களிடையே இழந்த நம்பிக்கையை பாஜக மீண்டும்விதைத்தது. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நாம் தொடர்ந்து செயல்படவேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...