அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.90 லட்சம்! கொடுக்கும் இஸ்லாமியர்

அயோத்தியில் ராமர் ஆலய கட்டுமான பணிக்கு பலரும் நன்கொடை அளித்து வரும் நிலையில் இஸ்லாமிய மக்களும் நன்கொடை வழங்கிவருகின்றனர். குறிப்பாக உத்திர பிரதேசத்தில் இருந்து நன்கொடைகள் குவிகின்றன. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலுக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று நன்கொடை அளிக்க இஸ்லாமிய குடும்பத்தினர் முன் வந்துள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் கலபாரில்வசிக்கும் டாக்டர் முகமது சமர் கஜினி, ராமர் கோயில் கட்டுவதற்காக தனது தனிப்பட்ட சொத்தை விற்று அதன்மூலம் கிடைக்கும் சுமார் 90 லட்சத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டவும் முஸ்லிம்களும் அயோத்தி மற்றும் காவியை நேசிக்கிறார்கள் என்ற செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்வதற்காக இதனைசெய்வதாகவும் சமர் கூறியுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காவி உடைஅணிந்து ரமலான் தொழுகையை நடத்தியவர்தான் சமர் கஜினி என்பது குறிப்பிடத் தக்கது. முகமது சமர் கஜினி பாஜக சிறுபான்மைபிரிவு தலைவராக இருந்தவர் என்பதும்,பாஜகவின் மீதான பற்று காரணமாகவும், யோகி ஆதித்யநாத்தின் செயல் பாடுகளாலும் கவரப்பட்ட அவர் ராமர் கோயிலுக்காக தங்கள் சொத்துக்களை தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

யோகி எந்தமதத்திற்கும் எதிரானவர் அல்ல என்றும், குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு மட்டுமே எதிரானவர் என்றும் கூறியசமர், இது எங்களின் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து, இதை நாங்கள் அயோத்தியின் பெயரில் நன்கொடையாக அளித்து யோகி ஜிக்கு வழங்குவோம். பிரார்த்தனையில் நாங்கள் அணிந்திருந்த காவிஉடையின் மூலம் நாங்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம். யோகி ஜியின் அணிந்திருக்கும் காவி நிறம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ எதிரானதல்ல என்பதை முழுநாட்டிற்கும் தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...