ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வழிபாடு செய்தார்.
பின்னர் அயோத்தி கோயில் விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,
“எனக்கு முந்தைய மூன்று தலைமுறையினரும் ராமஜென்மபூமி இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தபோதும் எனக்கு அயோத்திக்குச் செல்வதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.
ஆனால் ஒரு அரசின் அமைப்பு அதிகாரவர்க்கத்தால் சூழப்பட்டுள்ளது. அந்த அதிகாரவர்க்கத்தில் உள்ள ஒரு பிரிவினர், நான் ஒரு முதல்வராக அயோத்திக்குச் செல்வது சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று கூறினர். அப்போது, தேவைப்பட்டால் சர்ச்சை வரட்டும் என்று நான் கூறினேன்.
நான் அயோத்திக்குச் சென்றால், ராமர் கோயில் பற்றிய பேச்சு இருக்கும் என்று மற்றொரு பிரிவினர் கூறினர்.
நான் அதிகாரத்திற்காக அயோத்திக்கு வந்தேனா என்று அவர்களிடம் கேள்வி கேட்டேன். அப்படி, ராமர் கோயிலுக்கு வருவதால் அதிகாரத்தை இழக்க வேண்டியிருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் முன்பெல்லாம் தலைமை சரியாக இல்லாததால் அயோத்திக்கு அதிகம் வராத மக்கள், இன்று லட்சக்கணக்கில் வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |