வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

 ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் உண்ட உணவின் சுவை, ஏப்பமாக வாயு கலைதல், நெஞ்சு எரிச்சல் போன்ற பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தவிர்க்க வேண்டியவை:
இறைச்சி வகைகள், முட்டை, கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி அதிக இனிப்பு வகைகள், பல்வேறு வகையான கொழுப்பு உணவுகள், காலிப்ளவர், முட்டை கோஷ்கள், அதிக கார்-போ-ஹைட்ரேட் வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இந்த நோய் உள்ளவர்கள் உணவில் "ப்யூரின்" என்ற பொருள் அதிகமாக உள்ள உணவைத் தவர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள்
இரப்பையில் புண், சிறுகுடலின் மேற்பகுதியில் புண் என்ற இரண்டு வகையான புண்கள் குடலில் ஏற்படுகின்றன. பொதுவாக, "வயிற்றெரிச்சல்", "புளிச்ச ஏப்பம்" ஏற்படுதல், ஜீரண சக்தி குறைந்து விடுதல், பசியின்மை, வயிறு பெருக்கம் போன்றவையும் கூட வயிற்றில் புண்ணிருப்பதற்கு அறிகுறிகளாக அமைகின்றன.

எனவே, வயிற்றுபுண் மற்றும் அது சம்பந்தப்பட்ட நோய்களுக்கு…
தவிர்க்க வேண்டிய உணவுகள்:

அதிகமான புளிப்பு, உப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதிக சூடான ஆகாரம் அல்லது திரவ உணவான காப்பி, டீ போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

மது பானங்கள் அருந்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தலைவலி, மற்றும் உடல்வலி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின், அனால்ஜின், ப்ராசிட்டமால், ப்ரூப்பன், நெப்ராக்ஷன், பினைல்புயூட்டோஷன், டைகுளோபினாக் போன்ற பல்வேறு மருந்துகளும் ஏற்கனவே உள்ள குடல் புண்ணை அதிகரித்து, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வயிற்றுப்புண் உள்ளவர்கள் இந்த மாத்திரைகளை முழுமையாகத் தவிர்த்துவிட வேண்டும். மிகவும் அத்தியாவசியமாகப் பயன்படுத்த வேண்டியது வந்தால் இவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்க வேண்டும். சிறுவர்களுக்குக் கண்டிப்பாக 12 வயதிற்குட்பட்டவர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது.
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
முட்டை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் உணவு
இவர்களுக்குத் தினமும் 1 கிலோ எடைக்கு 1 கிராம் வீதம் புரோட்டீன் கொடுக்க வேண்டும். தினமும் சராசரியாக 60 கிராம் வரை புரோட்டீன் தரலாம். பால் வயிற்றில் புண் இருப்பவர்களுக்குச் சிறந்த உணவாகும். ஏனெனில், பாலிலுள்ள புரோட்டீன் வயிற்றுப் புண்ணை நோகச் செய்வதில்லை. ஆட்டிறைச்சியின் 'சூப்' வகைகளைக் கண்டிப்பாகத் தரக்கூடாது. ஏனெனில் அதில் அதிக காரமிருக்கும்.

சேர்த்துக் கொள்ள வேண்டியவை:
வெண்ணெய், நெய், பாலாடை, தயிர், மோர் போன்றவையும் நல்லது மிகவும் எண்ணெயில் வறுத்த உணவுகள் ஜீரணமாவது கடினம். ஆகையால், அவற்றைச் சாப்பிடுகின்ற போது அவை பல தொந்தரவுகளையும் ஏற்படுத்தும்.

உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கக்கூடிய உணவு வகைகளை கொடுக்கின்ற அதே நேரத்தில் வைட்டமின் 'சி' நிறைந்த உணவையும் தருவது நல்லது வயிற்றுப்புண்ணை விரைவில் ஆற்றுவதற்கு உதவும்.

வயிற்றுப்புண் இருந்து அதிகமாகி இதனால் அதிக இரத்தம் வெளியேறியவர்களுக்குப் புரோட்டீன் உணவைத் தரலாம்.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...