டிஜிட்டல் இந்தியா, ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியாதிட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியாவாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதில் அவர் பேசியதாவது:

மக்களின் வாழ்க்கை முறையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியாதிட்டம் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்புச்சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை, தேர்வு முடிவுகள், வருமானவரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுதல், வங்கிசேவை உள்ளிட்டவற்றுக்காக வரிசையில் நின்று காத்திருந்தோம்.

ஆனால், டிஜிட்டல்வசதியை பயன்படுத்த தொடங்கியபிறகு வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்குவது முற்றிலும் ஒழிக்கப் பட்டுவிட்டது. டிஜிட்டல் இந்தியாதிட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது மட்டுமின்றி, இடைத் தரகர்களையும் ஒழித்துள்ளது.

தொழில்நுட்பத்தை முறையாக பயன் படுத்துவதே புரட்சியாகும். தொழில்நுட்பத்தை பெரியளவில் பயன்படுத்த பழகிக்கொள்ளவில்லை என்றால், காலம் நமக்காக காத்திருக்காது. தொழில் நுட்பத்தை பயன் படுத்துவதில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது.

21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா வாழ்வை எளிதாக்கி இருக்கிறது. இன்று கிராமங்களிலேயே மக்கள் பலசேவைகளை டிஜிட்டல் முறையில் பெற்று வருகின்றனர். ஆன்லைன் சேவைகள் காரணமாக இந்தியாவில் ஊழல் ஒழிந்துள்ளது. 4-வது தொழிற்புரட்சியை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை கொண்டு வரப்பட்டபோது முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார் பிரதமர்) இந்தத்  திட்டம் எப்படி இங்கு சாத்தியமாகும். இங்கு போதிய செல்போன்களே இல்லை என்றார். அவர் அதிகம்படித்தவர். அவரே இப்படிப் பேசினார். ஆனால், கடந்த மே மாதத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1.2 லட்சம் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆன்லைன்மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.2.25 லட்சம் கோடி, தவறானவர்கள் கைகளில் கிடைப் பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிசெலுத்தியவுடன் இந்தியா எப்படி சான்றிதழ் வழங்குகிறது என்று உலகமே வியந்து பேசிக்கொண்டிருக்க, சிலர் அந்த சான்றிதழில் ஏன் பிரதமர் மோடியின் படம் இருக்கிறது என கேள்விஎழுப்பினர்.

ஒருவர் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட உடனேயே அவரது செல்போனுக்கு சான்றிதழ் வந்துசேர்ந்துவிடுகிறது. இந்த வசதி டிஜிட்டல் புரட்சியால் வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...