இந்தியா வளர்ந்ததேசமாக உருவெடுக்க தொழில் நுட்பம் உதவும்

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்ததேசமாக உருவெடுக்க தொழில் நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திறன் வெளிப்படுத்தல்; தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்துகொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது:

சிறு நிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்யும் செலவினங்களை குறைக்க அரசுவிரும்புகிறது. எந்த விதமான செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு தருமாறு தொழில் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இது வரை இது போன்ற 40,000 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்ததேசம் என்ற அந்தஸ்தை அடைவதற்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவும். டிஜிட்டல் புரட்சி அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் உள் கட்டமைப்பை நவீனமான முறையிலும், பரந்தவகையிலும் உருவாக்கி வருகிறோம்.

வரி செலுத்துவோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரடி தொடர்பில்லா வரி செலுத்தும் முறையை தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு உருவாக்கி செயல் படுத்தியுள்ளோம்.

5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில் நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் பெரியமாற்றங்களை ஏற்படுத்த தயாராக உள்ளன. சாமானியர்கள் எதிர்கொள்ளும் 10 சிக்கல்களை அடையாளம் கண்டு அதற்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வுகாண சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முற்சிக்க வேண்டும்.

தொழில்நுட்பம்தான் ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’’ என்ற அடிப்படை திட்டத்தின் முயற்சியை உருவாக்கியது. ஜன்தன் யோஜனா, ஆதார், மொபைல் நம்பர் ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழைகளுக்கு நன்மைகளை வழங்க பலவழிகளில் உதவியுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...