நாடுமுழுவதும் 100 கோடி தேசியக்கொடிகள் பறக்கவிடப்படும்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நாடுமுழுவதும் 100 கோடி தேசியக்கொடிகள் பறக்கவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

‘அம்ருத் மசோத்சவ் ஆஸாதி’ என்ற பெயரில் 75-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டம் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சமாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவது குறித்து மத்தியஅரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

‘ஹர் கர் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி)’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று முன்தினம் இணைய வழியில் கூட்டம் நடைபெற்றது. உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண்ரெட்டி, மாநில முதல்வர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று 100 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் நாடுமுழுவதும் பறக்கவிடப்பட உள்ளன. இதன்மூலம், குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரின் தேசபக்தி வெளிப்பட உள்ளது. உலக நாடுகளில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான தேசியக் கொடிகள், தபால் நிலையங்களிலும், இணையதள சந்தைகளிலும் கிடைக்கும். ஜுலை 22 முதல் அரசு இணையதளங்களில் சுதந்திரதின முத்திரையும், வாசகமும் இடம்பெற உள்ளன.

பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆகஸ்ட்11 முதல் 14 வரை தேசியக்கொடிகளை ஏற்றி அதன் பதிவுகளை இணையதளங்களில் பதிவேற்றலாம்’’ என்று தெரிவித்தார்.

இதே கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது, ‘‘பிரதமரின் முக்கியப் பார்வையிலான இந்தநாளை உ.பி.யிலும் மிகச் சிறப்பாகவும், வைராக்கியத்துடனும் கொண்டாட திட்டமிடபடுகிறது. இந்த தினத்துக்காக ஆகஸ்ட் 11 முதல் 17 வரை சுதந்திரதின வாரமாக உ.பி.யின் ஒவ்வொரு கிராமம் உட்பட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இளம் தலைமுறையினர் இடையே நம் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் அனைவரின் தார்மீகக் கடமையாகும். இதில் நம்நாட்டின் பாதுகாப்பையும், செழிப்பையும் இணைத்துக் கூறப்படவேண்டும்’’ என்றார்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக சிறு குறு மற்றும் நடுத்தரதொழில் துறையினரிடம் இருந்து இணையதளம் வழியாக 2 கோடி தேசியக்கொடிகளை வாங்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், 1.18 கோடி தேசியக் கொடிகளை மாநில சுய உதவிக் குழுக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் தனியாரிடம் விலைக்குபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.