நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை திறப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
10 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் முன்னேற்றங்களை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்து, நடைமுறைப்படுத்தி உள்ளது, நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பாக நாடு முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதில் 6 கல்லூரிகள் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உருவாக்கப்பட்டவை. தற்போது 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன.
தற்போது நாட்டில் 750 மாவட்டங்களில் 766 மருத்துவமனைகள் இருக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, 20 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |