ஆகாச கருடன் கிழங்கு

ஆகாச கருடன் கிழங்கு கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என வேறு பல பெயர்களும் உண்டு. இருப்பினும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர்தான் முன்பு அனைவருக்கும் தெரிந்தபெயராக இருந்து வந்துள்ளது.

இம்மூலிகை காடுகள்,வனம் , மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 – 50 வருடங்களுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்கு சென்று இக்கிழங்கை சேகரித்துகொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

நிலத்தில் பூமியின்அடியில் விளையும் கிழங்குவகையான இம் மூலிகைகிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம்முன்னோர்கள் சூட்டினார்கள்.?

பொதுவாக பூமியில் ஊர்ந்துசெல்லும் பாம்பு வகைகள்  ஆகாயத்தில் கருடன் பறந்துசெல்வதை பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ளும். அதே போன்று இக்கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடும், ஓடிவிடும்.

இம் மூலிகை கிழங்கை கயிற்றில்கட்டி வீட்டில் தொங்கவிட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப்போலவே தோற்றம் தரும்.

உண்மையில் ஆகாசகருடன் என்ற இம் மூலிகைக்கு மாபெரும் சக்தி உண்டு. "சாகா மூலி" என பெயரும் இதற்குண்டு. ஆம் இம் மூலிகை கிழங்கு  சாகாது . இக்கிழங்கை ஒரு கயிற்றில்கட்டி தொங்கவிட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர்வாழும் சக்திகொண்டது.முளைவிட்டு கொடியாக படர்ந்துவிடும்.

இம் மூலிகைகிழங்கிற்கு சில அமானுஷ்யசக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும்தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர்வினைகளை ஈர்த்து தன்னைத்தானே அழித்து கொள்ளும் தன்மைகொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் இருந்து காக்கப்படுவர்.

ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன் :-

இதன் முக்கியகுணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத்தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும்குணம் கொண்டது. ஆனால் சித்தமருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்புசுவை கொண்டது.

சிறப்பாக பாம்புவிஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில்முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாசகருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்னகொடுக்க 2தடவை வாந்தியும், மலம்கழியும் உடனே விஷமும் முறிந்துவிடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...