வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்நிறுத்தப்படுவார். என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’’ என்று தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றபட்டது.
இதில் கலந்துகொண்ட பாஜக தேசியதலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது டெல்லியில் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் முக்கியமுடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் அமைக்க திட்டமிடபட்டது.
இதற்காக 750 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் 250 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கபட்டுள்ளன. 512 மாவட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது பிஹாரில் 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் புதிய அலுவலகம்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
பாஜகவின் கொள்கைகள் வலுவானவை. இதன்காரணமாக மாற்று கட்சிகளிடம் இருந்து பாஜகவில் இணைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |