ஊழல் செய்வது, கடன்வாங்குவது, பொய் சொல்வதில் தான் திமுக ஆட்சி முதலிடத்தில் இருக்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் பாஜக மாநிலத்தலைவர் கே. அண்ணாமலை பேசியதாவது:
திருமயம் தொகுதியிலிருந்து அமைச்சராகியிருப்பவர் ரகுபதி. அவருக்கு ஊழல் தடுப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமான சொத்துசேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர் அவர். இதைத்தான் திராவிட மாடல் என்கிறார்கள்.
அதிகமாக கடன் வாங்குவதும், பொய்சொல்வதும், ஊழல் செய்வதிலும் தான் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
இம்மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்தப் பயனும் இல்லை. மீண்டும் மோடிதான் பிரதமராகப்போகிறார். அப்போது இங்கிருந்து பாஜக எம்பி செல்லவேண்டும். அதற்காகத்தான் இந்த யாத்திரை என்றார் அண்ணாமலை.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |