ஸ்டாலினுக்கு ‘குட்டி மோடி’ போல ஆக ஆசை இருக்கிறது

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் எட்டுஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக பாஜக சார்பில், சென்னை கீழ்ப் பாக்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:

கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜகவினர் போல, எந்தகட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது. 2014 லோக் சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, பாஜக ஆட்சி அமைத்தது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளார். இது பாஜகவின் சிறப்பான சமூக நீதிக்கொள்கைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சிதலைவர் மாயாவதிகூட, திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், சமூகநீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின் பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பிவருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒருபழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் முக.ஸ்டாலினுக்கு காய்ச்சல்வந்துவிட்டது.

சமூகநீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம்இருக்கிறதா? தனிமனிதனுக்கு சுயமரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்றபின் சாதனை நாடாக மாற்றிகாட்டியவர் நரேந்திர மோடி. புலியை பார்த்து பூனை சூடுபோட்டது போல, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல; அதாவது, ‘குட்டிமோடி’ போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையான மக்கள் சேவையாற்ற வேண்டும்.

திமுகவைப் பொறுத்தவரை கட்சி தான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வர வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. பிரதமர், ‘ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில் திட்டங்களை வகுத்துவந்தார். தமிழகத்தில், ‘ஆப்பரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இதை கட்டுப்படுத்தும் துணிவு இருக்கிறதா? வரும் லோக் சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பாஜகவுக்கு 25 எம்.பி.,க்கள் கிடைக்கப்போவது உறுதி. நிச்சயம் அந்தமாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரைமலரும். இந்த மண்ணில் என்றென்றும் பாஜக ஆட்சி தொடரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...