நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்று

370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இந்ததீர்ப்பு “ஜம்மு & காஷ்மீர், லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர் களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமை ஆகியவற்றின் மகத்தான அறிவிப்பு” என்று அவர் பெருமையுடன் கூறினார்.

சட்டப்பிரிவு 370 ஐ ரத்துசெய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது; இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒருஉறுதியான அறிவிப்பு. நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியர்களாகிய நாம், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாகவும், போற்றவும் வைத்திருக்கும் ஒற்றுமையின் சாரத்தை வலுப்படுத்தியுள்ளது” என்று சமூக ஊடகமான X இல் பதிவிட்டுள்ளார் மோடி.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவின் விதிகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை ஒருமனதாக உறுதிசெய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் பெரும் ஊக்கமாகப் பார்க்கப்படுகிறது.

“ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச்சேர்ந்த மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக இருக்கும் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட நமதுசமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று மோடி பதிவில் கூறினார்.

“இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர் காலத்திற்கான உறுதிமொழியாகவும், வலிமையான, ஒன்று பட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்