ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க விமானப்படையின் அலாஸ்காவில் உள்ள ஈல்சன் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட சிவப்பு கொடி 2024 பயிற்சியில் இந்திய விமானப்படை குழு பங்கேற்றது. இது செங்கொடி 2024 இன் இரண்டாவது பதிப்பாகும், இது ஒரு மேம்பட்ட வான்வழி போர் பயிற்சியாகும். இது அமெரிக்க விமானப்படையால் ஒரு வருடத்தில் நான்கு முறை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை, சிங்கப்பூர் குடியரசு விமானப்படை, இங்கிலாந்தின் ராயல் விமானப்படை, ராயல் நெதர்லாந்து விமானப்படை, ஜெர்மன் லுஃப்ட்வாஃபே மற்றும் அமெரிக்க விமானப்படை (யுஎஸ்ஏஎஃப்) ஆகியவை பங்கேற்றன.
ரஃபேல் விமானம் மற்றும் விமான குழுவினர், தொழில்நுட்பவல்லுநர்கள், பொறியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் அடங்கிய பணியாளர்களுடன் இந்திய விமானப்படையின் படைப்பிரிவு பங்கேற்றது
செங்கொடி என்பது யதார்த்தமான போர் அமைப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட பல வகைகளில் நடத்தப்படும் ஒரு வான் போர் பயிற்சியாகும். விரும்பிய சூழலை உருவகப்படுத்துவதற்காக படைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, சிவப்புபடை வான் பாதுகாப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது. நீலப்படை தாக்குதல் கலப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது..
IAF இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் செங்கொடி பயிற்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். சவாலான வானிலை மற்றும் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை இருந்தபோதிலும், ஐ.ஏ.எஃப் பராமரிப்பு குழுவினர் பயிற்சியின் காலம் முழுவதும் அனைத்து விமானங்களின் சேவைத்திறனை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றினர்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |