கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு

இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, திறன் வாய்ந்த மற்றும் வசதியான வகையில் சர்வதேச பணப் பரிமாற்ற சேவைகளை  வழங்க முடிவு செய்துள்ளன. இதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த ஒத்துழைப்பால் இந்தியா முழுவதும் தொலைதூர பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றம் குறைந்த செலவிலான நிதி சேவைகள் கிடைக்கும்.

நாட்டின் மக்கள் தொகையில் அறுபத்தைந்து சதவீதம் பேர் குறைந்த நிதி உள்கட்டமைப்பு வசதிகளுடன் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தக் குடும்பத்தினர் வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு அனுப்பப்படும் பணத்தைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதுடன் சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.  இதைத் தவிர்க்க இந்திய அஞ்சலக வங்கியும், ரியா மணி ட்ரான்ஸ்பர் நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டுச் செயல்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை நாடு முழுவதும் உள்ள  25,000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் உடனடியாகப் பெற முடியும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய அஞ்சலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஆர் விஸ்வேஸ்வரன், கிராமப்புற இந்தியா நமது தேசத்தின் இதயமாக உள்ளது என்றார். கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர்  வெளிநாடுகளில் பணி புரியும் தங்களது குடும்பத்தினர் அனுப்பும் பணத்தைப் பெற்று பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். அவர்களுக்குப் பயன்  அளிக்கும் வகையில், இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை  கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகப் பெற்றுத்தர இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று  அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...