வரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளதால் அதனை குறைப்பதில் சிக்கல் நிலவுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ம.பி., மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: வரி விகிதங்களை பூஜ்ஜியமாக கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், இந்தியா முன் உள்ள சவால்கள் தீவிரமானது. அதில் இருந்து வெளிவர வேண்டியது உள்ளது.
விரி விகிதங்கள் தொடர்பாக மக்களின் கோபங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதனை குறைப்பதை, நம் முன் உள்ள சவால்கள் தடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிதித்தேவைகளுக்கு தற்போதைய வரி நடைமுறை முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |