தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில்வழங்க வேண்டும் எனவும், தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவுகிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவ மாணவர்கள் 7 ஆயிரத்து 276 பேரும், பல்மருத்துவ மாணவர்கள் ஆயிரத்து 893 பேரும் பட்டம் பெற்றனர்.
ஆயுஷ் மருத்துவம் படித்த மாணவர்கள் ஆயிரத்து 519 பேரும், செவிலியர், மருந்தியல் உள்ளிட்ட பல்வேறுதுறை சார்ந்த 29 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் பங்கேற்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர், கொரோனா பெருந்தொற்று நேரத்தில்கூட பணத்தை மையப்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டது வருத்தமளித்ததாக கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில்வழங்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |