முயற்சியின் அளவே தியானம்

 சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.

 

விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க முடியும். கற்களைச் செதுக்கினால்தான் சிலையாக்க முடியும். அதைப் போல இறைவனை நினைத்து, யோக நூல்கள் கூறும் ஒழுக்க நெறிகளையும், பயிற்சிகளையும் கடைபிடித்தால்தான் ஆன்மீக ஒளி மனதில் தோன்றும்.

இளையவரும், முதியவரும், உடல்நலம் இல்லாதவறும், ஊனமுற்றவரும் கூட தொடர்ந்து நீடித்த பயிற்சியால் தியானத்தில் வெற்றிபெற இயலும் என்று விதரயோக பரதீபிகை கூறுகிறது. பயிற்சி செய்பவனுக்கு உயிர்ச்சி கிட்டும்.

யோக நூல்களைப் படிப்பதால் மட்டும் தியானத்தில் வெற்றி கிட்டாது. யோக முறைகளைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் தியானத்தில் வெற்றிபெற முடியும்.

முயற்சியும் பயிற்சியும் இடைவிடாத சாதனையுமே தியானத்தில் ஒருவரை நிலைபெற வைக்க இயலும். சந்நியாசியைப் போல் உடுத்துவதாலோ, பேசுவதாலோ தியானத்தில் வெற்றி பெற முடியாது.

புலன் வழி இன்பங்களைவிட புலன்கள் வலிமையானவை. புலன்களைவிட மனம் வலிமையானது. மனதைவிட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா வலிமையானது. ஆசையை சீரமைத்தால் ஆன்மாவை உணரலாம். இந்த நிலையை அடையத் தொடர்ந்து பயிற்சிதான் தேவை.

விதை நிலம், எரு, தண்ணீர், காவல் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். அதுபோல ஒரு குரு அத்வைத தத்துவம் என்ற ஒருமைத் தத்துவ விதையை உள் அறிவு என்றும், நிலத்தில் ஊன்றினால் அது வளர்ச்சிப் பெற, ஒழுக்கம் என்ற உரமிட வேண்டும். அறிவை ஒன்றிப் பழகும் ஒருமை பழக்கமான தியானமும், ஆராய்ச்சி என்ற தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். அறிவை ஒன்றச் செய்து உறுதியான அசைவற்ற நிலையடைவதே தியானத்திற்குத் தேவையாக இருக்கிறது.

ஆகையால், அறிவு சலனப்பட்டுக் காம, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குணங்களில் எதுவாயினும் பார்த்துக் கொள்ளும் விழிப்பு நிலையாகிய காவல் புரிய வேண்டும்.

இவையனைத்தும் முயற்சிக்கும் பயிற்சிக்கும் ஏற்றபடி தியானம் என்ற விளைவு உண்டாகும்.

முயற்சிச் சிறகுகளை முடிவில்லாமல் அசைத்துக் கொண்டிருக்கும்போது, முடியாதது எதுவுமில்லை.

முயற்சி என்பது முன்னேறத் துடிப்பவர்களின் மந்திர சொல். முயற்சியே வெற்றிக்கு நீ இடும் மூலதனம், முயற்சியும் பயிற்சியும் தான் சாதாரண மனிதனை மாமனிதனாக சாதனையாளனாக உயர்த்துகிறது.

ஒரு முத்துச் சிப்பி மழைத்துளியை மெதுவாக நல் முத்தாக மாற்றுகிறது. அதற்கு குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த முத்துச் சிப்பியைப்போலவே நாமும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் தியானத்தைப் பழக வேண்டும். சிறிது கடினம் தான். சோதனைகள் வரலாம். சோதனைகளைச் சாதனையாக்கலாம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...