பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது” என ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டினார். அதனை மறுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛‛ பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டவில்லை” என பதிலடி கொடுத்தார்.

ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும் போது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார். பிறகு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை. எந்த பாரபட்சமும் காட்டவில்லை. எனது பதிலுரையை கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். முந்தைய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடப்பட்டதா? பட்ஜெட் உரையில் எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றால், அது புறக்கணிப்பு ஆகாது.

இடைக்கால பட்ஜெட், பொது பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவின் பெயர் குறிப்பிடவில்லை. அங்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்.

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. மக்களை தவறாக வழிநடத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. மேற்கு வங்கத்தில், நிதி அளித்தும் மத்திய அரசின் திட்டங்களை அம்மாநில அரசு அமல்படுத்தவில்லை. பிரதமரின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்த ...

மேக் இந்த இந்தியா திட்டம் -இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் பாராட்டு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்கள ...

உலகின் சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம் உலகில் உள்ள சாமர்த்தியமான தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் கு ...

பல்லாவரம் கழிவு நீர் சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி பல்லாவரம் உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி , ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நித ...

மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதியின் கீழ் அவதூறு பரப்புவதாக புகார் மத்தியஅரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துர ...

ராகுல் காந்தி ஒரு நப்பிக்கை துரோகி – சம்பித் பத்ரா விமர்சனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்று பாஜக ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...