காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது -பிரதமர் மோடி விமர்சனம்

‘காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை’ என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக். 05 ல் தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இன்று(செப்.,26) ஹரியானா பா.ஜ., தொண்டர்களிடம் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது.

காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை. ஹரியானாவில் உள்ள மக்களுக்கு அவர்களின் உட்கட்சி மோதல்கள் தெரியும்.

10 ஆண்டுகளாக பொது பிரச்னையில் இருந்து விலகி, குடும்ப நலனிற்காக செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். வாக்குச் சாவடியில் வெற்றி பெற்றவர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறார். பா.ஜ.,வுக்கு சேவை செய்ய மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

ஹரியானாவின் பழைய தலைமுறை தொண்டர்களாக இருந்தாலும் சரி, புதிய தலைமுறையினராக இருந்தாலும் சரி, அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்துள்ளது. மிகத் தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனமாக, நகைச்சுவைத் தொனியுடனும் செய்யும் திறன் அவர்களுக்கு உள்ளது. இதை ஹரியானாவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...