காங்கிரசை விட நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது -மோடி பேச்சு

‘காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி, சோனாபட் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் விவசாயத்துறையில் ஹரியானா முன்னணி மாநிலமாக மாறி உள்ளது. பா.ஜ., இந்தியாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வை அமோக வெற்றி பெற ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஊழல் விவகாரத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா எதிர்கொள்கிறார்.

காங்கிரசுக்கு ஓட்டளிப்பது என்பது ஹரியானாவின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை பணயம் வைப்பதாகும். தவறுதலாகக் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது மாநிலத்தையே அழித்துவிடும். காங்., அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமைதி பிடிக்காது. காஷ்மீரில் மீண்டும் 370வது சட்டப்பிரிவை கொண்டுவர விரும்புகிறார்கள். இடஒதுக்கீடு மீதான வெறுப்பு காங்கிரசின் டி.என்.ஏ.,வில் உள்ளது.

காங்கிரசை விட வஞ்சகர், நேர்மையற்றவர் யாரும் இருக்க முடியாது. இன்று எதுவாக இருந்தாலும், அதில் ஹரியானாவின் பங்களிப்பு அளப்பரியது என்று பெருமையுடன் கூறுகிறேன். ஹரியானாவில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் நெருங்கி வருவதால், பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...