மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை

அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ எனப்படும் மருந்து ஒழுங்குமுறை ஆணையங்களின்19-வது சர்வதேச மாநாடு முக்கியமானது மத்தியசுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் கூறியுள்ளார்.

புதுதில்லியில் இன்று (16.10.2024) நடைபெற்ற மருந்துஒழுங்குமுறை அதிகாரிகளின் 19-வது சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய அவர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள், ஒழுங்குமுறை நடைமுறைகள்குறித்து எடுத்துரைத்தார். புதியமருத்துவ சோதனை விதிகள் -2019, மருத்துவ சாதன விதிகள் 2017 ஆகியவை மருத்துவ பரிசோதனையில்  உலகளாவிய எதிர்பார்ப்புக்கும் சர்வதேச நடைமுறைகளுக்கும்இணையாக அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளை மேம்படுத்துவதில்உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளைப் பாராட்டிய திருமதி அனிப்பிரியா படேல், ஒத்துழைப்பு, கலந்துரையாடல், ஆகியவை மிகவும் முக்கியமானது என்றார். இந்த துறைகளில் உலகசுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும்  அமைச்சர் எடுத்துரைத்தார்.

ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தரமான சுகாதார சேவை கிடைப்பதைஉறுதி செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று மத்திய இணையமைச்சர் வலியுறுத்தினார் .

நிகழ்ச்சியில் பேசிய நித்திஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், தரமான மருந்துகள், வாழ்க்கைத் தரத்தையும்,  வாழ்க்கை முறையையும் மேம்படுத்துகின்றன என்று கூறினார். இந்தியாவிலும்உலகம் முழுவதிலும் சுகாதாரத்தின்எதிர்காலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று கூறிய அவர், இந்தியா டிஜிட்டல் சுகாதார சேவைகளுக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...