நாடுமுழுதும் மருத்துவ படிப்புக்கு புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

நாடுமுழுதும் மருத்துவ படிப்புக்கு, புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

இங்குள்ள பாட்னாவில் ஏற்கனவே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டுவரும் நிலையில், தர்பாங்காவில் 1,260 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிரதமர் நரேந்திரமோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது, பீஹாரில் 5,070 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளவுள்ள தேசியநெடுஞ்சாலை பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அதுமட்டுமின்றி, 1,520 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், 4,020 கோடி மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறைசார் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி கூறியதாவது:

மத்தியில் தேசியஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முதல்வர் நிதீஷ் குமாரின்பங்கு அளப்பரியது. மாநிலத்தை முந்தைய காட்டாட்சி பிடியில் இருந்து அவர் மீட்டுள்ளார்.

நாடுமுழுதும் மருத்துவ படிப்புக்கு புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தாய்மொழியில் மருத்துவக்கல்வி என்ற மிகப்பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. விரைவில், ஹிந்தி உட்பட இந்திய மொழிகளில் மருத்துவப்படிப்பை கொண்டு வரவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

திட்டங்களை துவக்கிவைத்து மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை நோக்கிச்சென்ற முதல்வர் நிதீஷ் குமார், கைகூப்பிவணங்கியதுடன், திடீரென அவர் காலில்விழுந்தார். அதைத் தடுத்த பிரதமர் மோடி, கைகளை குலுக்கி தன் அருகே அமரவைத்தார். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியினர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக பிரமாண்ட மாலை அணிவித்தபோது, அருகில் இருந்த நிதீஷ்குமாரையும் அவர் அருகே இழுத்து நிறுத்திக்கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...