அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை

அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு, ” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் தி.மு.க., ஈடுபட்டு வந்தது, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், கவர்னர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டார் போலும். ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதல்வரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதல்வர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...