நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை

“முதல்வர் ஸ்டாலின், பயம் காரணமாக தான் நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி எழுதிய, ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நுாலை வெளியிட, ‘அன்பு பாலம்’ நிறுவனர் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய ஜனநாய கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:

பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தொழில்நுட்பம் இருவரிடமும் இருக்கும் என்ற நிலை, இந்தியாவில் தான் உள்ளது.

நுாலில், பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச கழிப்பறை திட்டம், குடிநீர் திட்டம் என, பல இடம் பெற்றுள்ளன. குழாயில் பாதுகாப்பாக குடிநீர் வழங்குவதால், ஆண்டுக்கு, 2 வயதுக்கு கீழ், 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இன்று புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்களுக்கு, 40 வினாடிக்குள் ஒரு தகவலை கொடுத்தால் தான் அவர்களால் கிரகிக்க முடியும். பா.ஜ.,வில் உள்ள இளைஞர்கள் புத்தகம் எழுத வேண்டும்; அதை கட்சி ஊக்குவிக்கும்.

தமிழகத்தில் பா.ஜ., எழுத்தாளர்கள் அதிகம் வர வேண்டும். திராவிட கட்சிகளில் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளனர். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜ.,வில் எழுத்தாளர்கள் வர வேண்டும்.

பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பதால், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், 2022, 2023, 2024 என, நிடி ஆயோக் மூன்று கூட்டங்களுக்கு செல்லவில்லை.

நிடி ஆயோக் கூட்டத்திற்கு சென்றால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச வேண்டும். பயம் காரணமாக தான் கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அந்த இடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் நாடகத்தை மக்கள் நன்றாக பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...