மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களாலும் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக நிற்கின்றனர்.
தட்சிண கன்னடா, மங்களூரின் சக்தி நகரில், அரசு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் உறைவிடப் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதிப்பது இல்லை. கைவினை பொருட்கள் தயாரிக்க கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளியில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி, நறுமணமான ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது.
பள்ளியின் நான்கு ஆசிரியர்களுக்கு, பெங்களூரின், கிராப்டிஞ்சன் பவுண்டேஷன் சார்பில், ஊதுவர்த்தி தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த இவர்கள், மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர். உறைவிடப் பள்ளியின் 20 மாணவர்கள் ஊதுவர்த்தி தயாரிக்கின்றனர்.
உலர்ந்த பூக்களின் இதழ்களை பொடியாக்கி, ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. கோவில், நிகழ்ச்சிகள், மார்க்கெட்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் மிச்சமாகும் பூக்களை சேகரிக்கின்றனர். ரோஜா, சாமந்தி, மல்லிகை, செண்டுப்பூ உட்பட, பலவிதமான பூக்கள் பயன்படுகின்றன. இவற்றை ஒரு வாரம் வரை நிழலில் உலர்த்துகின்றனர். அதன்பின் இதை பொடியாக்கி, வாசனை திரவியங்கள், தண்ணீர் சேர்த்து ஊதுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. ஊதுவர்த்திகளை பேக்கிங் செய்து விற்பனை செய்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் ஊதுவர்த்திக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பல இடங்களில் இருந்து ஆர்டர் வருகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
யாரையும் சார்ந்திராமல் தங்களாலும் உழைத்து சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இவர்களுக்குள் உருவாகிறது. உறைவிடப் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்களின் முயற்சியே இதற்கு காரணம். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |