திராட்சையின் மருத்துவக் குணம்

 திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ஊட்டமளிப்பது. புத்துணர்ச்சியூட்டதக்க குளிர்ச்சியான கனி திராட்சை.

நன்றாக நீர்ப்போக்கைத் தூண்டும். இது தாகத்தையும் தணித்து, வயிறு எரிச்சலை மட்டுப்படுத்தும். காய்ச்சல், ஆஷ்துமா, நெஞ்சக நோய், தொழுநோய், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குரல் கோளாறு, வாந்தி, உடல் பருமன், வீக்கங்கள், நெடு நாளைய காமாலை என பல்வேறு உடல் கோளாறுகளையும் குணமாக்கும். குடலில் அமிலத் தன்மை ஏற்படுவதைத் தவிர்த்துவிடும்.

இளமையைத் தக்கவைத்து முதுமையை அண்டவிடாமல் திராட்சை பாதுகாக்கிறது. மிகுந்த சத்துள்ள உணவு திராட்சை. வயிறு எரிச்சலைக் குறைத்து செரிமானத்தைச் சீராக்கி, வாயுப் பொருமலைப் போக்கவும் செய்கிறது.

சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற சிறுநீரகத் தொல்லைகளை குணமாக்கும் அருமருந்து திராட்சை கனிகள். ஒழுங்கற்ற, வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, மூட்டுவலி இவற்றைச் சரிசெய்ய வல்லது திராட்சை.

திராட்சையில் சர்க்கரைத் தன்மை கூடுகிறது. திராட்சையிலுள்ள குளுகோஸ் வகையிலானது. மற்ற பழங்களைக் காட்டிலும் திராட்சையிலுள்ள குளுகோஸ் அளவில் மிக அதிகம். இந்தப் பழத்திலுள்ள குளுகோஸ் எளிதில் உடலில் சத்தாக உறிஞ்சப்பட்டுவிடும்.

மிகக்குறைந்த அளவே இரும்புச்சத்து இருந்தாலும் எளிதாக உடலில் சேர்வதால், ரத்தச் சோகைக்கு திராட்சை பழங்களும் உதவி செய்யும். 3௦௦ மில்லி லிட்டர் திராட்சைச்சாறு பருகினாலே போதும், ரத்தச்சோகை நோயை எதிர்த்து உடலுக்கு வலுவேற்றும்.

திராட்சைப் பழத்தில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் உள்ளன. இவை ரத்தத்திலுள்ள நச்சை சுத்திகரித்து, மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கும் உதவுகின்றன. சிறுநீரகங்களுக்கும் மருத்துவரீதியாகப் பக்கப்பலமாக உள்ளது.

திராட்சையை கொத்தாகப் பறித்து, பழங்களைக் கழுவிவிட்டு வாயிலிட்டு தின்னலாம். ஆனாலும், திராட்சையைச் சாறாக அருந்துவதே மிகுந்த பலன் தரக் கூடியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...