மாணவி பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் சந்தேகம் – அண்ணாமலை

” அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று மீடியாக்களிடம் பேசுகையில், முதலில் போலீசாரிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், நேற்று மீடியாக்களைச் சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே போலீசுக்கு புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பா.ஜ., இதனை விடப் போவதில்லை. பிரச்னையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் தி.மு.க., அரசுக்கு இருக்குமேயானால், தி.மு.க., அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...