திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள்

வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை நான் வெளியிட்டதால்தான், என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வீடியோஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்டாலின் பேசுகையில், ஹிந்தி பேசுபவர்களை தமிழகத்தில் வேலையில், நுழைப்பதுமூலம் பாஜ., வை வளர்ப்பதற்கு ஒரு சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்கு இங்குஇருக்கும் பழனிசாமி கும்பல்கள் வேடிக்கை பார்க்கலாம். அதனை திமுகவோ தமிழக மக்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டுஇருக்க மாட்டார்கள் என அழுத்தம் திருத்தமாக சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பொன்முடி பேசுகையில், ஹிந்திபடித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். நம் ஊரு கோவையில் போய்பாருங்கள்..ஹிந்திகாரன் தான் பானிபூரி கடை வைத்திருக்கிறார்கள் என பேசுகிறார்.

அமைச்சர் நேரு பேசுகையில், ரயில் நிலையங்களில் பார்த்தால் வடமாநிலத்தவர்கள் அதிக பேர் வேலை பார்க்கிறார்கள் என வடமாநில தொழிலாளர்கள் பற்றி கிண்டலாக பேசுகிறார்.

வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்யவேண்டும். வெளி நாடுகளிலிருந்து தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது. வடமாநிலத்தவர் தமிழகத்தில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார் என பேசுகிறார்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசுகையில், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வடமாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப் படுகிறது. தேர்தல் நேரத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனக் கூறுகிறார்.

இந்த வீடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என்மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யவும் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார் குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, ...

நகர்ப்புற நக்ஸல்களை அடையாளம் க ...

நகர்ப்புற நக்ஸல்களை அடையாளம் கண்டு அவர்களின் முகமூடியை மக்கள் கிழித்தெறிய வேண்டும் – மோடி பேச்சு நகர்ப்புற நக்சல்களை அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை மக்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...